BHAGYARAJ NEWS
பாக்யராஜூக்கு கிடைத்த இன்ப அதிச்சி?
நடிகர் கே.பாக்யராஜ், அவர் நடத்தும் பத்திரிகையில் இன்ப அதிச்சி கொடுத்து அவத்துவது வழக்கம். இப்போது அவருக்கு ஒரு படக்குழு இன்ப அதிச்சி கொடுத்து அசத்தி இருக்கு.
ஏ.பி.சி. ட்ரீம்ஸ் எண்டர்டெய்னர்ஸ் சார்பில் குருவண்ண பஷீர் தயாரிக்கும் புதிய படம் 'செளந்தர்யா'. இந்தப் படத்தின் கதை எழுதி டைரக்ஷன் செய்துள்ளார் சந்திரமோஹன். இந்தப் படத்துக்கு அஜ்மல் அஜிஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் உள்ள பிரசாத் தியேட்டரில் நடைபெற்றது.
இயக்குநர் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்ததினராக கலந்து கொள்ள முதல் சிடியை தியேட்டர் அதிபர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் வெளியிட்டார். இன்னொரு தியேட்டர் உரிமையாளரான திருச்சி ஸ்ரீதர் முதல் சிடியை பெற்றுக்கொண்டார்.
பிறகு, அனைவரையும் மேடையிலிருந்து இறங்குமாறு அறிவித்தனர். சிறப்பு விருந்தினர்கள் நடப்பது என்வென்று எதுவும் புரியாமல் மேடையை விட்டு இறங்க, திரையில் விவேக் பேசிய ஐந்து நிமிட படம் ஓடியது. அது விவேக் கதையின் நாயகனாக நடிக்கும் பாலகாட்டு மாதவன் படத்தின் செய்தி.
இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார் பாக்யராஜ். அந்த ஏழு நாட்கள் படத்தில் அவர் நடித்த. கதாபாத்திரத்தின் பெயர் 'பாலக்காட்டு மாதவன்'. அதன் பெயரில் படம் எடுக்கப்போவதை அவர் நினைக்கவே இல்லை. அந்தப் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' அறிவிக்கத்தான் அவரை அந்த விழாவுக்கு சிறப்பு விருந்ததினராக அழைத்திருந்தனர்.
ஆரம்பம் முதலே அடுத்தப் படம் அறிவிக்கப் போவதாக சொல்கிறீர்களே, அந்தப் படத்தின் பெயர் என்ன என்று பாக்யராஜ் கேட்ட போதெல்லாம், ''நீங்கள் அங்கே வந்து பாருங்க சார்'' என்று பதுங்கி, ஒதுங்கிய படக்குழுவினர், இப்படி அவரது கதாபாத்திரத்தின் பெயரையே படப் பெயராக காட்டிய போது, உண்மையிலேயே அவர் இன்ப அதிச்சிக்கு ஆளானார்.
பிறகு கே.பாக்யராஜ், 'பலக்காட்டு மாதவன்' படத்தின பர்ஸ்ட் லுக் அறிமுகப் படுத்தி வைக்க, பத்திரிகையாளர்கள் அசோக்குமார், பைம்பொழில் மீரான் இவரும் பெற்றுக் கொண்டர்.
பிறகு கே.பாக்யராஜ் பேசுகையில், "இந்த இசை வெளியீட்டு விழாவில் இவர்கள் தயாரிக்கும் அடுத்தப் படத்தின் அறிவிப்பு அறிவிக்கப் போகிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், அந்த படத்தின் தலைப்பு பாலகாட்டு மாதவன் என்பது இப்போதுதான் தெரிந்தது.
இந்த தலைப்பை பார்த்தவுடன் எனக்கு எனது பழைய நினைவுகள் வந்துவிட்டது. அந்த ஏழு நாட்களில் நான் ஒரு வசனம் பேசுவேன், "சாரே இந்த லோகத்தில் ஒரு யோக்கியன் இருக்கிறான் என்றால் அது இந்த பாலகாட்டு மாதவன் தான்" என்ற அந்த வசனம் எனக்கு நினைவுக்கு வந்தது. இந்த தலைப்பை பார்த்ததும் எனக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது.
இந்தப் படத்துல விவேக் கதாநாயகனா நடிக்கிறாரு. இந்த டைட்டிலுக்கு பொருத்தமான நடிகர் விவேக். தயாரிப்பாளர் குருவண்ண பஷீருக்கும், இயக்குநர் சந்திரமோகனுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன்.
பாலகாட்டு மாதவன் படத்தில் நான் ஒரு காட்சியில் தோன்றுவது போல நடித்தால் நன்றாக இருக்கும். அப்போது தான் அந்த தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்துல நான் இல்லாம இருந்தால் சரியா இருக்காது. நான் இல்லாமல் இந்தப் படம் வந்தாலும் சரியா இருக்காது. அதனால இந்தப் படத்துல எனக்கு ஒரு கேரக்டர் தரணும்னு டைரக்டரை கேட்டுக்கிறேன். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் படப்பிடிப்பு உள்ளது போல வச்சுக்கங்க.." என்றார்.
பல படங்களில் நடிக்க அழைக்கிற போது, அவரின் கேரக்டர் சரியில்லை என்றால் நடிக்க மறுக்கும் பாக்யராஜ், இந்தப் படத்தில் அவரே நடிக்க கேட்ட போது, படக்குழவுக்கு இன்ப அதிர்ச்சியாக மாறியது.
கொசுறு செய்தி: நடிகர் விவேக் வெளியூரில் இருந்ததால், பாக்யராஜின் மொத்த பேச்சையும் செல்போனில் அவருக்கு லைவ் பண்ணினார் அவருடன் நடிக்கும் 'செல்' முருகன்.
புதுமுகங்கள் கோவிந்த், கில்லர் காசிம், ரித்தூஸன், சாரதி, சந்தோஷ், வினித் வினு, சஞ்சுகொட்டேரி என்று பலர் நடிக்க, இவர்களுடன் மாறுபட்ட வேடத்தில் எப்எம்எஸ் நடராஜன் நடித்துள்ளார். அஜ்மல் அஜீஸ் என்பவர் இசையமைத்திருக்கிறார். பாடல்களை கவிகுமரன் எழுதி உள்ளார். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியான ஆனைமலை, ஆனைக்கட்டி, தளிக்குள்ளம் பீச் போன்ற இடங்களில் படமாக்கி உள்ளேன். ரித்திக் சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை புரூஸ்லி ராஜேஷ் அமைத்திருக்கிறார். வித்தியாசமான நடன காட்சிகளை விஜய ரக்ஷித் அமைத்துள்ளார். பரபரப்பான இந்தப் படத்திற்கு ஆத்மஜன் திரைக்கதை எழுதி இருக்கிறார். சின்னதாக சொன்னாலும் பஞ்ச் வைத்த மாதிரி வசனங்களை தீட்டி உள்ளார், வசனகர்த்தா ஜே.ரமல் பிரபு.
மேலும் விபரங்களுக்கு
ஜி.பாலன்////////
செய்தி தொடர்பாளர்//////////////////
////Kumar srinivs///
Photo/video journalist
No comments:
Post a Comment