இயக்குநர் ஆர். பன்னீர்செல்வத்தின் டைரக்ஷனில் வெளிவந்து அமர்க்களமாக ஓடிக்கொண்டிருக்கும் ’18 வயசு’ படத்தில், ஹீரோ ஜானியின் ‘சித்தப்பா’வாக நடித்திருக்கிறார் டாக்டர். சூரி.
’காதலாகி’, ‘மாஞ்சா வேலு’, ‘வல்லக்கோட்டை’, ‘ஆயிரம் விளக்கு’, ‘ஆடுகளம்’ படங்களில் நடித்திருந்தாலும், டாக்டர். சூரிக்கு ப்ரேக் கொடுத்திருக்கும் படம் ’18 வயசு’.
சினிமாவில் ஒரு நடிகனாக அங்கீகாரம் பெற்றிருக்கும் டாக்டர். சூரி ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்தவர். வேதியியலில் டிகிரி பட்டம் வாங்கிய பிறகு, மேனேஜ்மெண்ட் ஃபீல்டில் ஆர்வம் அதிகமாக எம்.பி.ஏ படித்தார், அதன் பிறகு மேனேஜ்மெண்ட் ஃபீல்டில் பி.ஹெச்.டி. முடித்து டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார். கொல்கத்தாவில் இருக்கும் ஈலம் மேனேஜ்மெண்ட் காலேஜில் மேனேஜ்மெண்ட் பற்றி லெக்சர் கொடுக்கும் விசிட்டிங் ப்ரொபஸராகவும் பணியாற்றிவருகிறார் டாக்டர். சூரி.
சினிமாவில் குணநட்சத்திர நடிகராக பெயரெடுக்க விரும்பும் டாக்டர்.சூரி ‘சைரிஸ்’ டெர்மா கேர் ப்ரைவேட் லிமிடெட்டின் மேனேஜிங் டைரக்டர் ஆவர். மேனேஜ்மெண்ட், பார்மஸி துறைகளில் முன்னணியில் இருக்கும் டாக்டர். சூரிக்கு ‘ஜோதிடமும்’ அத்துப்படி. ஜோதிடத்தில் டிப்ளமோ முடித்திருக்கும் இவர், நண்பர்களுக்கு ஜோதிடம் பார்ப்பதை ஒரு ஹாப்பியாக வைத்திருக்கிறார்.
’18 வயசு’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி டாக்டர். சூரி கூறுகையில், “டைரக்டர் ஆர். பன்னீர்செல்வம் இந்த ‘சித்தப்பா’ கேரக்டரை பத்தி சொல்லும்போதே ‘இது ஒரு நெகட்டிவ்வான் ரோல். பிஸினெஸ்ஸில் இருக்கும் நீங்க ஒரு நடிகராக மாறினால் மட்டுமே எடுபடும். அதுமட்டுமில்லாம உங்களுக்கும் ஃபைட் சீன் இருக்கும். ரிஸ்க்கான ஃபைட்டாக இருக்கும். ஆனால் படம் வெளிவந்தா உங்களை எல்லோரும் ‘சித்தப்பா சூரி’ன்னுதான் கூப்பிடுவாங்க’ என்று சொன்னார்.
அது அப்படியே நடந்திருக்கு. ’18 வயசு’ படத்தை ரசிகர்களோடு சேர்ந்து பல திரையரங்குகளில் பார்த்தபோது, பெரும்பாலான ரசிகர்கள் என்னைப் பார்த்தத்தும் ‘சித்தப்பா…சித்தப்பா..’ன்னு கூப்பிட்டது மறக்கவே முடியாத அனுபவம்.
இந்தப் படத்தை பொறுத்தவரை ஹீரோ ஜானி, சத்யேந்திரா, எனக்கும் நல்ல பெயர் கிடைச்சிருக்கிறதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.
தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரு நல்லகுணச்சித்திர நடிகராக பெயரெடுக்கிறதுதான் என் லட்சியம். அதே நேரத்தில் ‘சித்தப்பா’ மாதிரியான நெகட்டிவ் ரோல்களிலும் நடிக்க தயங்க மாட்டேன்.” என்று உற்சாகமாகிறார் டாக்டர். சூரி.
PRO:: GOPINATHAN
No comments:
Post a Comment