ஐம்பதுக்கும் மேற்பட்ட வயலின் இசைக் கலைஞர்கள் வாசிக்க
'என் பெயர் குமாரசாமி' படத்திற்கு லைவ் ரெக்கார்டிங்
வெகு விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'என் பெயர் குமாரசாமி' படத்திற்கு இறுதிகட்ட ரீ-ரெக்கார்டிங் பணி ஷரோன் ஸ்டுடியோவில் நடைபெற்றது. பின்னணி இசைக்கு மிகுந்த முக்கியத்தும் உள்ளதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட வயலின் மற்றும் இதர இசைக் கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.
இதுப் பற்றி படத்தின் இசையமைப்பாளர் வீ.தஷி கூறியதாவது -
"டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில், கீ போர்டு மூலம் பின்னணி இசை சேர்ப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் இசைக்கலைஞர்கள் வாசிக்கிற போது, எற்படுகிற உயிர்ப்பு இதில் பாதி சதவீதம் கூட கிடைப்பதில்லை. எனவே 'என் பெயர் குமாரசாமி' படத்தில் இசைக்களைஞர்களை வைத்து லைவ் ரெக்கார்டிங் செய்வதென்று முடிவு செய்தோம். பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் இந்தப் படம் பரபரப்பாக பேசப்படும். அதே போல இந்தியாவில் நம்பர் ஒன் பிளேயர்களை கொண்டது நம்முடைய சென்னை. இங்கு அவ்வளவு திறமைசாலிகள் இருக்கிறார்கள். அவர்களை பயன்படுத்தி வேலை வாங்கியதை பெருமையாக நினைக்கிறேன். இவ்வாறு இசையமைப்பாளர் வீ.தஷி தெரிவித்தார்.
இதுப் பற்றி படத்தின் இயக்குநர் ரதன் சந்திரசேகர் கூறும் போது -
"நடிகர் ஆர்.பார்த்திபன் பாடிய பாடல் உட்பட, பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்துள்ள நிலையில், பின்னணி இசையில் அதிக கவணம் செலுத்தி வருகிறோம். படத்தோட அவுட் புட் அவ்வளவு அருமையாக வந்திருக்கிறது. அதைப் போல கலர் கிரேடிங் எனப்படும் வண்ணக் கோர்ப்புப் பணியிலும் இந்தப் படம் நிச்சயம் பேசப்படும். பிரசாத் ஸ்டுடியோவைச் சேர்ந்த கலரிஸ்ட் அருணின் உழைப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது..." என்று குறிப்பிட்டார்.
இந்தப் படத்தில் புதுமுகம் ராம், மேற்கு வங்க நடிகை தேஸ்தா இராவதி, யுவா, மோனிகா பிலிப் ஆகிய இரண்டு ஜோடியுடன் பானுப்பிரியா, ராதாரவி, பப்லு பிருத்விராஜ், யோகி தேவராஜ், நாராயணன் தீபக் ஆகியோரும் நடித்துள்ளனர். மலையாளத்தில் காமெடியில் கலக்கும் பைஷூ, இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி உள்ளார். அவரது பாடிலாங்குவேஜ் காமெடி பட்டையை கிளப்புகிறது.
திருநல்லான் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு எடிட்டிங் : விடி.விஜயன், சண்டைப்பயிற்சி : சூப்பர் சுப்பராயன், ஸ்பெஷல் எபெக்ட் : முருகேஷ், ஒளிப்பதிவு : ஜீவ சாண்டில்யன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் ரதன் சந்திர சேகர்.
மேலும் விபரங்களுக்கு/
ஜி.பாலன்///-------------
/kumar srinivas/ photo/video journalist
செய்தி தொடர்பாளர்
No comments:
Post a Comment